தலையாட்டும் அதிமுக தலைவர்கள்: நல்லக்கண்ணு கடும் விமர்சனம்

தலையாட்டும் அதிமுக தலைவர்கள்: நல்லக்கண்ணு கடும் விமர்சனம்

1 mins read
fe35eb47-f751-4386-afed-b7a572b39841
-

புதுக்கோட்டை: தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை என இந்திய கம்யூ னிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உள்கட்சி மோதலால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "இதைப் பயன்படுத்தி மத்திய அரசு, தமிழக அரசை ஆட்டி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதன்படி அதிமுக தலைவர்கள் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்," என்றார் நல்லக்கண்ணு.