சீமான்: நடிகர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் தமிழக மக்கள்

சீமான்: நடிகர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் தமிழக மக்கள்

1 mins read
922dbe99-bed3-408a-a637-64ad1fdd6f87
-

திரைப்படங்களைப் பார்த்து ரசிப் பார்களே தவிர, நடிகர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனச் சாடினார். நடிகர்கள் கமலும் ரஜினியும் அரசியலுக்கு வரப் போவது உறுதி எனக் கூறப்பட்டு வரும் நிலையில், சில அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை நேரில் வரவழைத்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.