பெங்களூரு: உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க விரும்பிய இளைஞர்கள், ஓடும் ரயில் முன் 'செல்ஃபி' எடுக்க முயன்றதால் உயிரிழந்தனர். நேற்று காலை பெங்களூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 'வொன்டர் லா' என்னும் கேளிக்கை பூங்காவிற்கு கோரமங்கலா கல்லூரியில் பயிலும் பிரபு ஆனந்த் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் சென்ற நேரத்தில் கேளிக்கை பூங்கா திறக்காத தால், அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஓரமாக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்றனர்.
அப்போது, மைசூரில் இருந்து அவ்வழியாக வேகமாக வந்த 'கோல்கும்பாஸ்' விரைவு ரயிலின் முன் நின்று தங்களது கைபேசிகளில் 'செல்ஃபி' எடுக்க முயன்றனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ரயில் மோதியது. ரயில் சக்கரங்களில் சிக்கிய மூன்று வாலிபர்களின் உடல்களும் சுமார் 200 சதுர அடி தூரத்துக்கு சிதறிக் கிடந்தன. இந்த விபத்தில் பலியான பிரபு ஆனந்த் மட்டும் அடை யாளம் காணப்பட்டுள்ள நிலை யில் மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.

