ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூவரும் மின்னல் தாக்கியதன் காரணமாக நால்வரும் என ஆக மொத்தம் எழுவர் உயிரிழந்தனர். திங்களன்று மாலை 4.30 மணியளவில் பெய்யத் தொடங் கிய கனமழை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. ஹைதராபாத்தில் ஒரு சில இடங்களில் 12 செ.மீ. மழை பதிவானதாகவும் கூறப்படு கிறது. கனமழையால் ஹைதரா பாத் நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாரா மலைப் பகுதியில் வீடு இடிந்து விழுந்த தில் 6 மாத குழந்தை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த னர். மற்றொரு நபர் மின்சாரம் தாக்கி பலியானார். ஹைதராபாத்தின் சங்காரெட்டி மாவட்டம், நாராயண்கட் நகரில் மின்னல் தாக்கி நால்வர் உயி ரிழந்தனர். தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் ரயில் சேவை வெகு வாகப் பாதிக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் கனமழைக்கு எழுவர் பலி
1 mins read

