பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ் ஐக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று அமெரிக்கக் கப்பற்படை மூத்த அதிகாரி யான ஜோசஃப் டன்ஃபர்ட் குற்றம் சாட்டி இருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின்போது, அதிகாரமிக்க வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் முன்னிலை யில் திரு டன்ஃபர்ட் இதனைக் கூறினார். "தலிபான் அமைப்புக்கு ஐஎஸ்ஐ இன்னும் உதவி வருவதாக நினைக்கிறீர்களா?" என்று செனட்டர் ஜோ டோன்னெலி கேட்டதற்கு, திரு டன்ஃபர்ட் இவ்வாறு பதிலளித்தார். கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த அமெ ரிக்கா தனது இருதரப்பு உறவின் மூலம் முயன்று வருகிறது என்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்ட தாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரி வித்தார். பாகிஸ்தானின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர பலதரப்பு அணுகுமுறை உதவக் கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார். அமெரிக்கத் தற்காப்பு அமைச்சரான ஜேம்ஸ் மேட்டிசும் ஐஎஸ்ஐ அமைப்பைச் சாடினார்.
'பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு'
1 mins read

