சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ராஜீவ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகச் சுட்டிக் காட்டினார். இதனால் வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை விடுவிக்க கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு
1 mins read

