வங்கக் கடலில் இரு புயல்கள் உருவாக வாய்ப்பு; எதிர்கொள்ளத் தயாராகும் தமிழகம்

வங்கக் கடலில் இரு புயல்கள் உருவாக வாய்ப்பு; எதிர்கொள்ளத் தயாராகும் தமிழகம்

1 mins read

சென்னை: வங்கக் கடலில் இரு புயல்கள் அடுத்தடுத்து உருவாக வாய்ப்புள்ளதாக இந் திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அநேகமாக இம்மாதம் 7 மற்றும் 12ஆம் தேதிகளில் இப்புயல்கள் உருவா கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் மீண்டும் பெருமழை பெய்து சென்னை உள்ளிட்ட சில நக ரங்கள் வெள்ளக்காடாகும் என வானிலை நிபுணர்கள் கூறிய தாக சமூக வலைத்தளங்களில் அண்மைக் காலமாக பரபரப்புத் தகவல் உலா வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடர்பாக தனியார் வானிலை அமைப்புகள் பல்வேறு தகவல் களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதன் காரண மாகவும் மக்கள் மத்தியில் பர பரப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழகம் அடுத்தடுத்து இரு புயல்களை எதிர்கொள்ள வேண்டி இருக் கும் என டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள் ளது. அவ்விரு புயல்களாலும் சென்னைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது. "இந்த வார இறுதியில் வட கிழக்குப் பருவ மழை தொடங் குகிறது. இதையடுத்து வரும் 7ஆம் தேதி, 12ஆம் தேதியில் வங்கக் கடலில் இரு புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.