சென்னையில் டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தினந்தோறும் 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் இந்திய முறை மருத்துவம், ஓமியோபதி துறையின்கீழ் செயல்படும் 1,491 மருத்துவ நிலையங்கள், 28 சித்தா மற்றும் இந்திய மருத்துவ முறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் தினமும் வழங்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதைத் தவிர தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் கிலோ நிலவேம்பு பொடி தயாரிக்கப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் நிலவேம்பு கஷாயமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. படம்: தமிழக தகவல் ஊடகம்
50,000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்
1 mins read
-

