போலிஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய 2 கைதிகளுக்கு வலைவீச்சு

போலிஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய 2 கைதிகளுக்கு வலைவீச்சு

1 mins read

நெல்லை: காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய இரு கைதிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த மணிகண்டன் (23 வயது), சேலத்தைச் சேர்ந்த டேவிட் ஆகிய இருவரும் நாகர்கோவிலில் கார் திருடிய வழக்கில் கைதாகினர். இருவரையும் போலிசார் நெல்லை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்றபோது, கைவிலங்குடன் தப்பிவிட்டனர். இருவரும் ஏற்கெனவே மும்பை சிறையில் இருந்து தப்பி தமிழகம் வந்துள்ளதாகவும், இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.