ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி

ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி

1 mins read

சென்னை: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் ஜெயகுமார். இவருடைய மனைவி மல்லிகா (57). இவர்களுக்கு திருமணம் ஆகி 37 ஆண்டு கழிந்த பின்பும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந் நிலையில், மருத்துவரின் ஆலேசனைப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க ஜெயகுமார் முடிவு செய்தார். இதற்காக போலிஸ்காரப் பெண்மணி வெள்ளைமதி என்பவரை அவர் அணுகினார். வெள்ளைமதி 10 லட்சம் ரூபாய் கேட்டும் சில நிபந்தனைகளை விதித்தும் வாடகைத் தாயாக ஒப்புக்கெண்டார்.

இதனையடுத்து, ரூ.10 லட்சம் ரூபாய் வாங்கிய பின்னரும் ஜெயகுமாரை தெந்தரவு செய்ததேடு அவரது மனைவியின் 10 சவரன் நகையையும் வெள்ளைமதி திருடியதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து பேலிசில் ஜெயகுமார் புகார் அளித் தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதி மன்றத்தில் வழக்குத் தெடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயகுமாரிடம் மேசடி செய்த பெண் போலிஸ் வெள்ளைமதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.