குடிபோதை வழக்கு; நடிகர் ஜெய்யை கைது செய்ய உத்தரவு

குடிபோதை வழக்கு; நடிகர் ஜெய்யை கைது செய்ய உத்தரவு

1 mins read
3a03cc3d-15bd-4ef7-a0ab-b4577e1cdf64
-

சென்னை: சென்ற மாதம் 21ஆம் தேதி குடிபோதையில் நடிகர் ஜெய் ஓட்டிச் சென்ற கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இது சம்பந்தமாக அடையாறு போக்குவரத்து போலிசார், ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடர்ந் தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நடிகர் ஜெய் பிணை யில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் ஜெய் நேரில் முன்னிலையாகவில்லை. அதனால் நேற்று முன் தினம் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ஜெய் தலை மறைவாக இருப்பதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப் ட் டது. அதனைத் தொடர்ந்து ஜெய்யை இரு நாட்களுக்குள் கைது செய்து முன்னிலைப்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.