அரசியல் தலையீடு இருக்காது: பதவியேற்றதும் ஆளுநர் உறுதி

அரசியல் தலையீடு இருக்காது: பதவியேற்றதும் ஆளுநர் உறுதி

1 mins read
684c25ce-4f2b-43e8-bc8c-9f2918f74bd8
-

சென்னை: தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவ ருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத் தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் மற்றும் அமைச்சர்கள் ஆளு நருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஆளுநரைச் சந்தித்து வாழ்த்த முதல்வர், துணை முதல்வரை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட வேண் டும் என்பதுதான் முறை. ஆனால், முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் வாழ்த்து சொல்ல காத்திருந்தனர். இதனையடுத்து, மேடையருகே சென்ற ஸ்டாலின், ஆளுநரைச் சந் தித்து வாழ்த்துச் சொல்ல எப்போது அனுமதி கிடைக்கும் என அங் கிருந்த ஆளுநர் மாளிகை அதி காரிகளிடம் கடுப்புடன் கேட்டார். பதறிப்போன அதிகாரிகள், ஸ்டாலினை அழைத்துச் சென் றனர். பின்னர் அவர் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி னார்.