சென்னை: மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்து தமிழ கத்தை வஞ்சிக்கும் திட்டங்க ளுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக்கூடாது என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கெயில் நிறு வனத்தின் எரிவாயு குழாய் பதிக் கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசை அறிக்கை ஒன்றின் வழி அவர் வலியுறுத்தி உள்ளார். கொச்சி, பெங்களூரு, குஜராத் அகமதாபாத் காந்தி நகர் போன்ற பகுதிகளில் நெடுஞ்சாலை வழியாகவே எரி வாயு கொண்டு செல்லப்படுவ தாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மீண்டும் மீண்டும் உத்தரவு போடுவதை ஏற்க முடியாது என்றார். "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013 மார்ச் மாதம் கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்," என வைகோ நினைவுகூர்ந்துள்ளார்.
எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்: வைகோ கடும் எதிர்ப்பு
1 mins read

