பாஜகவை வளர்க்க முயற்சிக்கும் கிரண்பேடி: இந்திய கம்யூனிஸ்ட் சாடல்

பாஜகவை வளர்க்க முயற்சிக்கும் கிரண்பேடி: இந்திய கம்யூனிஸ்ட் சாடல்

1 mins read

புதுவை: பாஜகவைப் புதுவையில் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதுவை ஆளுநர் கிரண் பேடி செயல்படு வதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஆர். விஸ்வ நாதன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன் எப்போதும் இல்லாத வகையில் புதுவையில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். மாநில அரசின் மெத்தனம் தான் இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட அவர், ஆளுநரா, அமைச்சர்களா என யார் சொல்லுக்கு கட்டுப்படுவது எனத் தெரியாமல் புதுவை அதிகாரிகள் திண்டாட்டத்துக்கு ஆளாகி உள்ளதாகக் கூறினார்.