கார்த்தி: தமிழகத்தில் அரசாங்கம் என்பதே இல்லை

கார்த்தி: தமிழகத்தில் அரசாங்கம் என்பதே இல்லை

1 mins read

சென்னை: தமிழகத்தில் தற் போது அரசாங்கம் என்பதே இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், தமிழகத் தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் நல்ல காரியம் செய்ய வேண்டுமென நினைத்தால் உடனடியாக சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும் என்றார். "தமிழகத்தில் பொதுத் தேர் தல் நடத்தப்பட வேண்டும். கட்சி யிலும் மக்கள் மத்தியிலும் ஆதரவே இல்லாதவர்கள்தான் தற்போது ஆட்சியை நடத்துகின் றனர். தமிழக அரசில் பாஜக நேரடியாக தலையிட்டாலும், குறுக்கு வழியில் தலையிட்டாலும் அவர்களுக்கு இங்கு செல்வாக்கு என்பதே இல்லை," என்றார் கார்த்தி. வாரிசு அரசியல் என்ற நிலை மாற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வாரிசு என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு யாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார்.