புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனா வுக்கும் இடையே நிலவி வரும் அண்மைய பதற்றமான சூழ் நிலையில் மருந்துகள், மருத்துவப் பொருட்களுக்கு சீனாவை நம்பி யிருக்கும் நிலையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. சுகாதார அமைச்சு மருந்து தரக் கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து சீனாவை அதிக அளவில் சார்ந்திருக்கும் நிலை யைக் குறைப்பதற்கு உகந்த தொடர் நடவடிக்கைகளை எடுக்க திட்டம் தீட்டி வருவதாகவும் நல்ல தரமான மருந்துகள் மட்டுமே இந்தியச் சந்தைக்குள் நுழையும் வகையில் தொடர்ச்சியான ஒழுங்குமுறை சோதனைகளை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீன மருந்துப் பொருட்களை குறைக்க இந்தியா திட்டம்
1 mins read

