முதல்வரின் புகைப்படத்துக்கு செருப்பு மாலை போட்ட பாஜகவினர் கைது

முதல்வரின் புகைப்படத்துக்கு செருப்பு மாலை போட்ட பாஜகவினர் கைது

1 mins read

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் படத்துக்குச் செருப்பு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்த பாஜக சட்ட மேலவை உறுப்பினர் மாதவன் உள்பட 10க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார் பினராயி விஜயன். இந்நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாஜகவினர் பிரனாயி விஜயனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.2017-10-09 06:00:00 +0800