தமிழ்நாட்டில் டெங்கிக் காய்ச்சல் பரவலும் அந்நோயால் உயிரிழப் போர் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு காய்ச்சலுக்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளதாக மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார். இதில் டெங்கி காய்ச்சலால் 35 பேர் இறந்துள்ள தாகவும் 10,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள தாகவும் அவர் கூறினார். இந்நிலையில், தமிழக முதல் அமைச்சரின் விரிவான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெங்கி சேர்க்கப்படாதற்கு தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
அண்மையில் டெங்கிக் காய்ச்சலுக்கு ஆறு மாத குழந்தை பலி யானது. அதற்கு சிகிச்சையளிக்க போதிய பணவசதி இல்லாததால் குழந்தையின் தாயாரும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஏபி சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், டெங்கி தொடர்பில் பலமுறை விடுக்கப் பட்ட எச்சரிக்கைக ளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வில்லை என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள், இலவச மருத் துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கி சேர்க்கப்படாததற்கான விளக்கம் கேட்டுள்ளது.

