சென்னை: எதிர்வரும் 13ஆம் தேதி சென்னை, அண்ணா பல் கலைக்கழகத்தில் அனைத்துலக அறிவியல் மாநாடு நடைபெற இருப்பதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்திலும் அறி வியல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் பங்களிப்பை எடுத் துக்காட்டவும் இம்மாநாடு நடத் தப்படுவதாகக் கூறினார்.
நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 2,100 மாணவ, மாணவிகளும் 300 அறி வியல் விஞ்ஞானிகளும் பங்கேற்ப தாகக் குறிப்பிட்ட அவர், 750 இளம் விஞ்ஞானிகளும் வருகை தர இருப்பதாகத் தெரிவித்தார். உலக அளவில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 12ஆவது இடத்தில் இருந்து 9ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக அவர் கூறினார். "இந்தியா, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட அறிவியல் கதைகள் கொண்ட திரைப்படங்கள் இந்த மாநாட்டில் திரையிடப்படும். ஆழ்கடல் ஆய்வு மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து கருத்தரங்கு நடைபெறும்.

