கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 11 பேரின் மரண தண்டனை

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 11 பேரின் மரண தண்டனை

1 mins read

ஆயுள் தண்டனையாக குறைப்பு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கோத்ரா ரயில் நிலையத்தில் 2002 பிப்ரவரி 27ஆம் தேதி சபர்மதி விரைவு ரயிலின் ஒரு பெட்டி தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு விசா ரணை நீதிமன்றம் 2011 மார்ச் 1ஆம் தேதி 31 பேர் மீதான குற் றத்தை உறுதி செய்தது; 63 பேரை விடுவித்தது.

குற்றவாளிகளில் 11 பேருக்கு மரண தண்டனையும் மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்க ளுக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பதினொரு பேரின் மரண தண் டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அறிவித்த நீதிபதிகள் ஏ எஸ் தவே, ஜி ஆர் உதாரி ஆகியோர் கொண்ட அமர்வு, மற்ற 20 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது. அத்துடன், சிறப்பு விசாரணை நீதிமன்றம் 63 பேரை விடுதலை செய்ததையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.