ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா

1 mins read
6b3f9713-f0b4-4ca4-a52e-e149eb867771
-

பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா கமுதி அருகே சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. அங்குள்ள முதல்நாடு கிராமத்தில் முப்பிடாதி அம்மனுக்கு கோவில் உள்ளது. இக்கோவில் அருகே பெண் ஒருவரின் நினைவாக அமைந்துள்ள பீடத்துக்கு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பூசை செய்து திருவிழாவும் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான பெளர்ணமி தினத்தன்று, அந்தப் பீடத்துக்கு ஆண்கள் ஒன்றுகூடி கைக்குத்தல் பச்சரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தையும், 50 கிடாய்களைப் பலியிட்டும் படையல் வைத்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர். படம்: தகவல் ஊடகம்