ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மணிஷ் குமார் கிரியை கப்பல் மாலுமி பொறுப்பிலிருந்து இந்திய கடற்படை நீக்கியுள்ளது. இதனால் ஆவேசமடைந்துள்ள அவர், என்னாலும் எதிரிகளைச் சுட்டு வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். கடந்த 2010ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணிஷ் கிரி, ஐஎன்எஸ் இக்ஸிலா கப்பற்படைத் தளத்தில் மாலுமியாக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு விடுமுறைக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய அவரிடம் வித்தியாச மான மாற்றங்கள் தென்பட்டன. சேலை அணிந்தும் அவர் வலம்வந்தார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசார ணை நடத்தினர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை மருத்துவ மனை ஒன்றில் பாலின மாற்றத் திற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டதை மணிஷ் கிரி ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
பெண்ணாக மாறியது தவறா என்று கேள்வி எழுப்பும் மணிஷ் கிரி. படம்: இந்திய ஊடகம்

