கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மணப்புரம் சிவன் கோயிலில் முதல் தலித் அர்ச்சகரான யது கிருஷ்ணன் கருவறைக்குள் நுழைந்து பூசை களைத் தொடங்கியபோது அவரது சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான வர்கள் ஆரவாரத்துடன் துள்ளி குதித்தனர். அம்மாநிலத்தில் அர்ச்சகர் களாக நியமிக்கப்பட்ட பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினர்களில் யது கிருஷ்ணனும் ஒருவர். இவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அண்மையில் கேரள அரசின் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம், 62 பேரை அர்ச்சகர்களாக நியமித்தது.
இவர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அறுவர் உட்பட பிராமணர் அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். வாரியத்தின் எழுத்துபூர்வ தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு முன்பு திருவிதாங்கூர் தேவஸ்தானம், பிராமணர் அல்லாத வர்களை அர்ச்சகர்களாக நியமித் துள்ளது. ஆனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வாரியம் அர்ச்ச கராக நியமிப்பது இதுவே முதல் முறை.
கேரளா மாநிலத்தில் உள்ள மணப்புரம் சிவன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டுள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணன் திங்கட்கிழமை அன்று தனது பணியைத் தொடங்கினார். படம்: இந்திய ஊடகம்