புதுடெல்லி: கொலம்பியா அணிக்கு எதிரான 17 வயதிற்குட் பட்டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வெற்றிக் காக போராடிய இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. டெல்லியில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, கொலம் பியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணி 49வது நிமிடத்தில் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் ஜூயன் பெனாலோசா இந்தக் கோலை அடித்தார். 82வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜீக்சன் பதில் கோல் திருப்பினார். இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் கோல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும் கொலம்பியாவின் பல கோல் போடும் முயற்சிகளை இந்திய கோல் காப்பாளர் தீரஜ் அபாரமாகத் தடுத்தாடினார். ஆட்டம் சமநிலையில் முடிய லாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 83வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் ஜூயன் பெனாலோசா மீண்டும் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி தடுப்பாட்டத்தில் தடுமாறியபோது அவர் இந்தக் கோலைப் புகுத்தினார்.
போராடித் தோற்றது இந்தியா
1 mins read

