வேலு நாச்சியார் மேடை நாடகத்தை திரைப்படமாக தயாரிக்கும் வைகோ

1 mins read
98e5125e-3451-4252-87c5-c44df0390300
-

சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ, வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது அவர் தயாரிக்கும் முதல் படம். கண்ணகி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ள அவர், திரைப்படங்கள் மீது தமக்கு மிகப் பெரிய காதல் உண்டு எனக் கூறியுள்ளார். "எனது சினிமா காதலை வெளியில் காட்டிக் கொண்டதில்லை. வேலு நாச்சியார் கதையைத் திரைப்படமாக தயாரிப்பது எனது மிகப்பெரிய கனவு," என்று வைகோ தெரிவித்துள்ளார். வேலு நாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வைகோவுக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் விஷால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வேலு நாச்சியார் நாடகத்தைப் பார்வையிடும் வைகோ, நடிகர்கள் விஷால், நாசர். படம்: தகவல் ஊடகம்