சென்னை: பரோலில் வெளி வந்துள்ள சசிகலாவை மூன்று அமைச்சர்கள் ரகசியமாக சந் தித்துப் பேசியதாக வெளியான தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து அதிருப்தியில் உள்ள அக்குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் முதல்வர் தரப்பு சமாதானப்படுத்தி உள்ளதா கவும் தகவல் வெளியாகியுள்ளது. தன் கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் இருந்து ஐந்து நாள் பரோலில் வந்துள்ளார் சசிகலா.
தற்போது தனது உறவினரான கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கி இருந்தபடி அவர் அரசியல் ரீதி யில் காய்களை நகர்த்தி வருவ தாகக் கூறப்படுகிறது. தனக்கு ஆதரவாகவும் விசு வாசமாகவும் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அவர் தொலை பேசி வழி தொடர்புகொண்டு பேசி வருவதாகவும் இதனால் ஆளும் தரப்பில் பல்வேறு குழப் பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பல்வேறு தகவல்களை வெளி யிட்டு ஊடகங்கள் பரபரப்பை உருவாக்கி வருகின்றன.

