தெருவில் குப்பை கொட்டுபவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

தெருவில் குப்பை கொட்டுபவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

1 mins read

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் தெருக்கள் மற்றும் சாலைகளைத் தூய்மையாகப் பராமரிக் கவும் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாக அதிகாரி உதயராஜ்சிங், "சாலைகளில் குப்பைகளைத் தேக்கி வைப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்படும். கழிவுகளை பொது இடங்கள், நதி, கால்வாய் மற்றும் குளங்களில் கொட்டுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குப்பைத் தொட்டிகளை வைக்காத உணவு விடுதிகளுக்கு ரூ.5 ஆயிரமும் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களிடம் இருந்து 200 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்," என்றார். இந்த அபாரதத் தொகை சம்பவ இடத்திலேயே வசூலிக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.