வாஷிங்டன்: இந்தியப் பொருளியலின் உத்வேகம் இரு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டது என்று அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பு இழப்பு, பொருள் சேவை வரியால் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழ்நிலை ஆகிய இரு நடவடிக்கைகள் இந்திய பொருளியலை மந்தமடையச் செய்துள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது. இந்திய பொருளியல், தெற்காசிய பொருளியல் குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் 2017ல் ஏழு விழுக்காடாக உள்ள பொருளியல் சரிவு 2018ல் 7.3 விழுக்காடு வரை இருக்கும் என்றும் நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தியாவின் வளர்ச்சி விகித மந்தநிலை தெற்காசிய வளர்ச்சி விகிதத்தையும் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளியல் வளர்ச்சி மந்தம்
1 mins read

