மனைவி 18 வயதுக்குக் கீழ் இருந்தால் பாலியல் உறவு குற்றமாகும்

மனைவி 18 வயதுக்குக் கீழ் இருந்தால் பாலியல் உறவு குற்றமாகும்

1 mins read

புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளைத் திருமணம் செய்து அவருடன் உறவு கொண்டால் பாலியல் பலாத்கார மாகக் கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள் ளது. இதன்படி திருமணமானாலும் 18 வயதுக்குக் கீழ் உள்ள மனைவி யிடம் உடலுறவு கொள்வது சட்டப் படி குற்றமாகும். திருமணமாகி ஓராண்டிற்குள் கணவர் மீது மனைவி புகார் கொடுத்தால் அது பாலியல் பலாத்காரமாகக் கருதப் படும் என்றும் நீதிமன்றம் கூறியது. குழந்தை திருமணத்தைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் நேற்று இந்தத் தீர்ப்பை வழங்கி யுள்ளது. பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பதின்ம வயது பெண் களைத் திருமணம் செய்து பாலி யல் உறவு கொள்வதும் பாலியல் வன்கொடுமையே. மேலும் இத் தகைய சம்பவங்களில் பாதிக்கப் பட்ட பெண்களால் அளிக்கப்படும் புகாரை அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்யலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.