தேனி: தேனி மாவட்டம், பெரிய குளம் அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்து களில் மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் ஒழுகுவதால் இதில் பயணம் செய்வது பெரும் சவாலான காரியமாக உள்ளது. பெரியகுளம் அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர், பெரியகுளத்தைச் சுற்றியுள்ள கிரா மங்களுக்கு என மொத்தம் 72 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 10 முதல் 15 பேருந்து களில் மட்டுமே மழை பெய்யும் நேரத்தில் பேருந்தின் உட்புறம் மழைநீர் ஒழுகாமல் இருக்கின்றன.
மற்ற பேருந்துகள் அனைத்திலும் மழை பெய்யும் நேரத்தில் பேருந் துக்குள்ளேயே மழைநீர் ஒழுகு வதால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் குடை பிடிக்கவேண் டிய நிலை உள்ளது. குறிப்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களும் மழைநீரில் நனைந்தபடியே வாகனத்தை ஓட்ட வேண்டிய அவலம் தொடர்கிறது. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வ லர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசுப் பேருந்துகளைத் தணிக்கை செய்யும் அதிகாரிகள் முறையாக தணிக்கை செய்து பேருந்து பயணிகளின் பாது காப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

