கொசு இனப்பெருக்கம்; ரூ.12.5 லட்சம் அபராதம்

கொசு இனப்பெருக்கம்; ரூ.12.5 லட்சம் அபராதம்

1 mins read
1217736c-49ce-47e9-bcc8-8d787fd5abae
-

சென்னை: டெங்கிக் கொசுக் களின் இனப்பெருக்கத்துக்கு காரணமாக இருந்த வீடு, கடை நிறுவனங்களின் உரிமையாளர் களுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை அபராதத் தொகை விதித்து ரூ. 12.5 லட்சம் வசூலித்துள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள். "எச்சரிக்கை கடிதம் விநி யோகித்தும் பொது சுகாதாரத் திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கவேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. "சென்னையில் இதுவரை யில் 2.5 லட்சம் பேருக்கு எச்சரிக்கை கடிதம் விநியோகிக் கப்பட்டது. அபராதத் தொகை யாக ரூ.12.5 லட்சம் வசூலிக் கப்பட்டுள்ளது. "இன்னும் இரண்டு நாட் களுக்குள் கழிவுப் பொருட் களை அகற்றவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். "பொது மக்களைத் தண் டிக்கவேண்டும் என்பது எங் கள் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் தேவையற்ற பொருட் களை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது," என்றார் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்.

டெங்கிக் காய்ச்சலுடன் ஆபத்தான நிலையில் உள்ள தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் காலதாமதம் செய்வதாகக் கூறி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் மகனை மடியில் போட்டுக்கொண்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் தந்தை. படம்: ஊடகம்