சென்னை: இன்னும் இரண்டே மாதங்களில் நடக்கும் என அறி விக்கப்பட்டுள்ள ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் முதல் வர் எடப்பாடி பழனிசாமி அரசாங் கத்திற்கு மிகமுக்கிய சோதனை யாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்தத் தேர்தலில் பல கட்சி களை மட்டுமின்றி, டிடிவி தின கரனையும் அவர் வெற்றிகொள்ள வேண்டிய நிலை இருக்கும் என்பதால் எடப்பாடி தரப்பினர் பரபரப்பு அடைந்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ கே ஜோதி, டிசம்பர் 31க்கு முன்பு அந்த இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்ததை அடுத்து தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகிவிட்டன.
திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின், நேற்று செய்தியாளர் களைச் சந்தித்தபோது, "ஆர் கே நகரில் எப்போது தேர்தல் நடந் தாலும் திமுக அதை எதிர் கொள்ளும். நாளைக்கே தேர்தல் நடந்தாலும் திமுக போட்டியிடும்," என்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு என்ன காரணங்களுக்காக ஆர்கே நகரில் தேர்தல் நிறுத்தப் பட்டதோ அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப் பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் கோரினார்.

