கோடையில் குடிநீர் பஞ்சம் வராது

கோடையில் குடிநீர் பஞ்சம் வராது

1 mins read
0e58db68-dac5-421a-b2a7-5ead5083420c
-

சென்னை: தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் பூமியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் மேற்கு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வருவதாகவும் ஆகையால் வரும் கோடை காலத்திற்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்றும் அரசாங்க தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தென்மேற்குப் பருவமழை கை கொடுத்திருக்கிறது என்ற அவர், வடகிழக்குப் பருவமழை பொய்த் தாலும் மேட்டூர், பவானிசாகர் தண்ணீரை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று திட்ட வட்டமாகக் குறிப்பிட்டார். வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்வதாகவும் சென்னையைச் பொறுத்தவரை ஆந்திராவில் நல்ல மழை பெய்தால் மட்டுமே நிலைமை மேம்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, ஆந்திராவில் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் 17 ஆண்டு களுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில் மேட்டூர் அணை நீர்வரத்து வியாழக்கிழமை 31,236 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஓர் அடி உயர்ந்து 97.30 அடியாகவும் நீர் இருப்பு 61.39 டிஎம்சியாகவும் உயர்ந்தது.

கடந்த இரண்டு மாத காலமாகவே பாலாற்றுக்குத் தண்ணீர் வந்தபடி இருந்தது. செம்பாக்கம் அருகே பாலாற்றில் தண்ணீர் ஓடிய காட்சி. படம்: தமிழக ஊடகம்