சென்னை: திமுக சட்டமன்ற உறுப் பினர் டிஆர்பி ராஜா புதன்கிழமை மன்னார்குடியிலிருந்து புதுக்குடி வரை அரசாங்க பேருந்தில் பயணம் செய்தார். தான் பயணம் செய்த பேருந் தில் பல இருக்கைகள் இல்லை என்றும் பலரும் நின்றுகொண்டு பயணம் செய்ததாகவும் அந்த எம்எல்ஏ தெரிவித்தார். அதோடு, பேருந்தின் கூரையில் ஓட்டைகள் இருந்ததாகவும் அது வழியாக சூரிய ஒளி உள்ளே புகுந்து பயணிகள் மீது பட்டதாக வும் தன்னையும் சூரியஒளி சுட்ட தாகவும் அவர் கூறினார். மன்னார்குடியைப் பிரதிநிதிக்கும் அந்த எம்எல்ஏவைப் பயணிகள் பலரும் சூழந்துகொண் டனர்.
தங்கள் பகுதிக்கு நல்ல பேருந்துகளை விடும்படி அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். போக்கு வரத்து அதிகாரிகளிடம் இது பற்றி பல தடவை எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது என்றும் ஆனால் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளவில்லை என்றும் ராஜா தெரிவித்தார். "புதிய பேருந்துகளை விடும்படி போக்குவரத்துத் துறை அதிகாரி களிடம் பலதடவை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். "ஆனால் அவர்களிடமிருந்து பதிலே இல்லை. இன்னமும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ஆர்ப்பாட்டத் தைத் தவிர வேறு வழியில்லை," என்று எம்எல்ஏ எச்சரித்தார்.
மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அரசு பேருந்தில் மன்னார்குடி யிலிருந்து புதுக்குடி வரை சென்றார். படம்: இந்திய ஊடகம்

