13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்கள், குகைகள் கண்டுபிடிப்பு

13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்கள், குகைகள் கண்டுபிடிப்பு

1 mins read

திருப்பத்தூர்: விஜய நகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள், கோட்டைச் சுவர், ரி‌ஷிகள் வாழ்ந்த குகைகள் திருப்பத்தூர் அருகே கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூர் அருகே உள்ள சந்திரபுரம் கிராமத்தில் 1,500 மீட்டர் உயர முள்ள மலையில், கி.பி. 13ஆம் நூற்றாண்டு விஜய நகர பேரரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில், கோட்டைச் சுவர், ரி‌ஷிகள் வாழ்ந்த குகையும் அதில் கன்னட எழுத்து களும் பொறிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகள் கடந்தும் இச்சுவர் சிதைவடையாமல் உள்ளது ஆச்சரியமூட்டுகிறது.