சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைப் பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான அவகா சம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், "சொந்த வீடு என்ற கனவோடு உள்ள ஏழைகள், நடுத் தர வகுப்பினர் விலை குறைவாக இருக்கின்ற ஒரே காரணத்தி னால், அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகளில் உள்ள மனை களை வாங்கியுள்ளனர். "இப்படிப்பட்ட மனைப் பிரிவு களில் சாலை வசதி, தெரு விளக்குகள், கழிவு நீர் கால்வாய், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. "எனவே இம்மனைகளை வாங்கியுள்ள விவரம் அறியாத பொதுமக்களின் இன்னல்களைப் போக்கும் வகையில் இம்மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வ ர ன் மு றை ப் ப டு த் து வ த ற் கா ன திட்டம் அறிவிக்கப்பட்டது.
"மேற்கண்ட திட்டத்தைச் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பு கள் மூலம் தெரிய வந்தது. "இவற்றை அரசு கவனமாக பரிசீலித்த பிறகு, வரன்முறைப் படுத்தும் திட்டத்திற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. "ஏற்கெனவே 6 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வருட மாக நீட்டிக்கப்பட்டுள்ளது. "அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் வரை அவகாசம் உள் ளது. மேலும் இத்திட்டத்தில் சில மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. "விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப் பிரிவுகளை 3 வகைகளாகப் பிரித்து வரன் முறைப்படுத்தும் முறை நீக்கப்பட்டு உள்ளது. "இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். "ஒரு மனைப் பிரிவில் குறைந்த பட்சம் ஒரு மனை விற்கப்பட்டு இருந்தால் அந்த மனைப் பிரிவு வரன்முறைப்படுத்தப்படும். "மேலும், மனைப் பிரிவில் அமைந்துள்ள சாலைகள் 'உள்ளது உள்ளபடி' நிலையில் வரன்முறைப் படுத்தப்படும்.

