மீண்டும் களமிறங்கும் டிடிவி தினகரன், மதுசூதனன்; ஆர்.கே.நகரில் விறுவிறுப்பு

மீண்டும் களமிறங்கும் டிடிவி தினகரன், மதுசூதனன்; ஆர்.கே.நகரில் விறுவிறுப்பு

2 mins read

சென்னை: ஜெயலலிதாவின் மறை வையடுத்து நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தேர்தலில் அதிமுக மூத்த தலைவர் மதுசூதனனும் டிடிவி.தினகரனும் மீண்டும் களம் காண உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவ ரில் யாருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும் எனும் எதிர் பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதிமுக இரண்டாகப் பிளவு பட்டிருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாள ராக மதுசூதனன் அறிவிக்கப்பட் டார். இதே போல் முதல்வர் பழனி சாமியை உள்ளடக்கிய சசிகலா தரப்பு சார்பாக தினகரன் களமிறக் கப்பட்டார். ஆனால் பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைப்பட்ட காலத்தில் அதி முகவில் மாற்றங்கள் ஏற்பட்டுள் ளன. முதல்வர் பழனிசாமி, ஓ.பன் னீர்செல்வம் ஆகியோர் இணைந்து விட்ட நிலையில், தினகரன் தலை மையிலான சசிகலா ஆதரவாளர் கள் தனி அணியாகச் செயல்படு கின்றனர். இதையடுத்து தினகரன் மீண்டும் போட்டியிடத் தீர்மானித் துள்ளார். முதல்வர், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் கள மிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்கு ஒதுக்கப் படுகிறதோ, அதுவே அதிமுக என தேர்தல் ஆணையத்தால் அங் கீகரிக்கப்படும். அந்த அணியின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என அரசியல் கள ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.