நீடிக்கும் கனமழை, வெள்ளம்; 40 கிராமங்கள் துண்டிப்பு

நீடிக்கும் கனமழை, வெள்ளம்; 40 கிராமங்கள் துண்டிப்பு

2 mins read
71796fcd-26ee-40da-8ef6-37a43b71db76
-

சென்னை: சுமார் 15 ஆண்டு களுக்குப் பின்னர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 கிரா மங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் அருகே, பாலாற்றில் நேற்று முன் தினம் 20 அடி உயரத்துக்கு வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில தினங்களாக தென் மாநிலங்களில் கனமழை நீடித்து வருகிறது. தமிழகத்திலும் ஆந்தி ராவிலும் வெளுத்துக்கட்டும் மழை யால் இரு மாநில எல்லையோரப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் தடுப்பணை முற்றிலுமாக நிரம்பிவிட்டது. வாணியம்பாடியில் இருந்து வேலூர் வரை பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் ஆந்திர எல்லை யோரம் உள்ள 4 ஏரிகளில் வெள் ளிக்கிழமை அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 4 ஏரி களிலும் இருந்து வெளியேறிய நீர் புல்லூர் தடுப்பணை வழியாகப் பாலாற்றில் பாய்ந்தது. இதற்கிடையே வேலூர் வட்டாரங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதன் காரணமாக பாலாற்றில் திடீர் வெள்ளம் பெருக் கெடுத்தது. ஏறத்தாழ 20 அடி உயரத்துக்குப் பாய்ந்து சென்ற வெள்ளத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் பிரமித்தனர்.

வெள்ளம் பாய்ந்து சென்ற வேகத்தில் பாலாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டு இருந்த தரைப்பாலங்கள் சில அடித்துச் செல்லப்பட்டதாக வும் பல பாலங்கள் மூழ்கி இருப் பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதன் காரணமாக பேரணாம் பட்டு, குடியாத்தம் செல்லும் வழியில் 40 கிராமங்களில் தரை வழிப் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக, ஆந்திர எல்லையில் புளியமரத்து பெண்டா பகுதியில் உள்ள வீரண்ணமலை தரைப்பாலத்தின் மத்திய பகுதி மட்டும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தரைப்பாலத்தின் உடைந்த பகுதியைப் பார்வையிடும் பொது மக்கள். படம்: தமிழகத் தகவல் சாதனம்