மதுரை: தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் டெங்கி காய்ச்சல் பொது மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மதுரை மாநகரம் பெரும் அபா யத்தை எதிர்நோக்கி உள்ளது. மதுரையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப் பதால் எளிதில் கொசு உற்பத்தி ஆகும் என்றும் இதனால் டெங்கி காய்ச்சல் பாதிப்பு வெகுவாக அதிகரிக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கா னோர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கானோர் டெங்கி பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், நூற்றுக்கும் குறைவானோர் மட் டுமே பலியாகி உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் டெங்கி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. கொசு உற்பத்திக்கு காரணமானவர் களுக்கு அபராதம் விதிக்கப்படு கிறது. இந்நிலையில் மதுரையில் பெய்த கனமழையை அடுத்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. மழைநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் போதுமான நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகள் அனைத்துமே கொசு உற்பத்திக் கூடாரங்களாக மாறிவிட்டதாகப் பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர். மதுரையில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைப் பகுதிகள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளதால் இரவு நேரங்களில் மட்டுமல்லாது, பகலிலும் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் கூட கொசுத் தொல்லை இருப் பதாக செய்தி வெளியாகியுள்ளது. "பொது இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நடவ டிக்கை எடுத்தால்தான் டெங்கி ஒழிப்பு நடவடிக்கை முழுமை பெறும்," என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை கீழமாரட் வீதிச் சந்தை. படம்: தமிழகத் தகவல் சாதனம்

