மனிதர்களைக் கொன்ற புலி மின்சாரம் தாக்கி மரணம்

மனிதர்களைக் கொன்ற புலி மின்சாரம் தாக்கி மரணம்

1 mins read
13e05779-f830-437d-aa6a-9048ed68fbd5
Google News Preferred Icon

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் கிராம மக்களைக் கொன்று சாப்பிட்டு வந்த புலி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த மாதத்தின் முற்பகுதியில் ஒரு மாதை இந்த இரண்டு வயது புலி அடித்துக் கொன்று சாப்பிட் டதைத் தொடர்ந்து புலியைச் சுட்டுக் கொல்ல வெள்ளிக்கிழமை அன்று மகாராஷ்டிர நீதிமன்றம் உத்தரவிட்டது. வனத்துறை அதிகாரிகள் புலியைத் தேடி வந்தநிலையில், புலி இறந்துள்ளது. காட்டுப் பன்றிகளை ஊருக்குள் வராவிடாமல் தடுக்கும் நோக்கத் தில் கிராம மக்கள் அமைத்துள்ள மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி நேற்று முன்தினம் புலி இறந்தது.

ஜூலை மாதத்தில் இருவரைக் கொன்ற இந்தப் புலி மேலும் நால்வரைக் காயப்படுத்தி யுள்ளது. புலிகள் பெரும்பாலும் மனிதர்களைத் தாக்குவதில்லை. எனினும், மனித மாமிசத்தின் ருசி கண்டபின் அவை இதுபோல் மனிதர்களைத் தாக்குவதுண்டு என வனத்துறையினர் கூறினர். உலகிலுள்ள புலிகள் எண்ணிக் கையில் பாதிக்கும் மேலாக இந்தியாவில் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 2,226 புலிகள் வனப் பகுதிகளில் வசிக்கின்றன. ஆண்டு ஒன்றுக்கு பல புலிகள் மனிதர்களால் கொல்லப் படுகின்றன.

கலா என்ற இந்தப் புலியை அதிகாரிகள் ஜூலை மாதம் பிடித்தனர். அதன் கழுத்தில் ரேடியோ கதிர் பட்டை பொருத்திய பின் காட்டில் விட்டனர். படம்: ஏஎஃப்பி