தமிழக முதல்வர் பழனிசாமி: டெங்கி பாதிப்பு சவாலாக உள்ளது

தமிழக முதல்வர் பழனிசாமி: டெங்கி பாதிப்பு சவாலாக உள்ளது

1 mins read
dc1d4e67-894d-463e-9d2a-a5d124dc3d43
-

டெங்கிக் காய்ச்சல் பரவல் தமிழக அரசுக்கு சவாலாக உள் ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, டெங்கியை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறினார். கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட ஆட்சியர், பொது சுகாதார அதி காரிகள், கிராம சுகாதார ஊழி யர்கள் = அதிகாரிகள், உள்ளூர் அமைப்புகள் என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுள்ளதாக அவர் சொன்னார். தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளும் நிலைமையைச் சமாளிக்க தேவை யான வசதிகளைப் பெற்றுள்ள தாகக் கூறிய பழனிசாமி, பாதிக் கப்பட்டோருக்குப் பலனளிக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சொன்னார். மாநிலம் முழுவதும் டெங்கிக் காய்ச்சலை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவ தாகவும் அவர் கூறினார்.