பாப்கார்ன் இயந்திரத்தில் ஒளித்துவைத்து 819 கிராம் தங்கம் கடத்தல்: ஒருவர் கைது

பாப்கார்ன் இயந்திரத்தில் ஒளித்துவைத்து 819 கிராம் தங்கம் கடத்தல்: ஒருவர் கைது

1 mins read

சென்னை: பாப்கார்ன் தயாரிப்புக் கருவியில் ஒளித்து வைத்து கடத்தி வரப்பட்ட 819 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 28 வயதான காஜா ரகமத்துல்லா என்ற இளையர் தடுத்து வைக்கப்பட் டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. சனிக்கிழமை காலை ரியாத் நகரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் மேற் கொண்டிருந்தார் காஜா. தன்னிடம் தங்கம் இருப்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிக ளிடம் விவரம் ஏதும் தெரிவிக் காமல் விமான நிலைய வருகைப் பகுதியில் இருந்து அவர் வெளியேற முற்பட்டார். அப்போது அவர் கொண்டு வந்திருந்த பாப்கார்ன் தயாரிப்பு இயந்திரத்தின் பிளாஸ்டிக் மூடி அகற்றப்பட்டு, அதற்குப் பதில் செயற்கை மலர்களால் மூடப்பட்டி ருந்தது.

இதனால் சந்தேகம டைந்த அதிகாரிகள், அவற்றைச் சோதனையிட்டபோது அடுத்த டுத்த சந்தேகங்களும் எழுந்தன. இதையடுத்து அந்த பாப்கார்ன் இயந்திரத்தை ஒவ் வொரு பகுதியாக ஆராய்ந்தனர். அப்போது இயந்திரத்தின் பேட்ட ரிகள் வித்தியாசமாகவும் கனமா கவும் இருப்பது தெரியவந்தது. எனவே அவற்றை உடைத்துப் பார்த்தபோது 7 தங்கக் கட்டிகள் அவற்றுள் மறைத்து வைக்கப்பட் டிருந்தன. மொத்தம் 819 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.24 லட்சம் எனத் தெரி வித்தனர். சுங்கத் துறை சட்டத் தின் கீழ் காஜா கைதானார்.