செம்மரக் கடத்தல்: தவிக்கும் பழங்குடியினர்

செம்மரக் கடத்தல்: தவிக்கும் பழங்குடியினர்

1 mins read

தர்மபுரி: தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் மேற் பட்ட பழங்குடியினர் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளதாகத் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான டில்லி பாபு கூறியுள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழங்குடியினர் பிணை பெற்று வெளிவர முடியா மல் தவிப்பதாகவும் அவர் களுக்குத் தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆந்திர வனப்பகுதிகளில் செம் மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சிக்கும் தமிழக மலைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2015ஆம் ஆண்டு ஆந்திர போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலைக்கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர்," என டில்லிபாபு சுட்டிக் காட்டினார். இந்த உயிர் பலிகளுக்குப் பிறகாவது திசை மாறும் பழங் குடி மக்களைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மறு வாழ்வுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்றுவரை அந்த எதிர்பார்ப்பு கானல் நீராகவே உள்ளது என்றார்.