சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நடை பெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்த லில் திமுகவை ஆதரிக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல், அதிமுக வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கும் திமுக வேட்பா ளருக்கும் இடையே நேரடிப் போட்டியை ஏற்படுத்துவதே தின கரனின் திட்டம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மறைவையடுத்து காலியான ஆர்.கே.நகர் தொகு தியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனினும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பியதால் இடைத்தேர்தலை அதிரடியாக ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் டிசம்பர் இறு திக்குள் இடைத்தேர்தல் நடை பெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிள வானது வேறு வடிவத்தை எட்டி யுள்ளது. இரு துருவங்களாக இருந்த முதல்வர் பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த் துள்ளனர்.

