சென்னையில் இருந்து மூன்று நாளில் 5 லட்சம் பேர் பயணம்

சென்னையில் இருந்து மூன்று நாளில் 5 லட்சம் பேர் பயணம்

1 mins read
34afb3c8-4725-4fdc-b657-74edbecd6bcc
-

சென்னை: கடந்த மூன்று தினங்களில் மட்டும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஐந்து லட்சம் பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொண் டுள்ளனர். இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட இந்த ஆண்டு சற்றே கூடுதலாக இருந்தது. கடந்த 14ஆம் தேதி முதல் ஏரா ளமானோர் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர். இதையடுத்து தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கியது. சென்னையின் ஐந்து பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த மூன்று தினங்களில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட பேருந்துகள் இயக்கப்பட்ட தாகப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை இரவு வரை பேருந்துகள் மூலம் 4 லட்சம் பேரும் ரயில்கள் மூலம் ஒரு லட்சம் பேரும் சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம். படம்: தகவல் ஊடகம்