மும்பையில் திருவள்ளுவர் சிலை திறப்பு

மும்பையில் திருவள்ளுவர் சிலை திறப்பு

1 mins read

மும்பை: மும்பை நகரில் முதல் முறையாக திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. முல்லுண்டி என்ற பொது இடத்தில் நிறுவப்பட்டுள்ள 11 அடி உயர திருவள்ளுவர் முழு உருவச்சிலையை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதற்கு மும்பை தமிழ்த் தொழில் வர்த்தக சபை, 'நேஷனல் எஜுகேஷன் சொசைட்டி', சரஸ்வதி வித்யா பவன் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.வரதராஜன், சர்தார் தாராசிங் எம்எல்ஏ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "கன்னியாகுமரியி லிருந்து பாத யாத்திரையை தொடங்கியபோது அங்கு நிறுவப்பட்டு இருந்த 133 அடி உயர திருவள்ளுவரின் சிலையைக் கண்டு வியப் புற்றேன். இங்கு திரு வள்ளுவரின் சிலையும் புத்தரின் சிலையும் அரு கருகே நிறுவப்பட்டுள்ளதால் இரு மகான்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத் துள்ளது," என்றார்.