கோல்கத்தா: கோல்கத்தாவில் ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள ஜீவன் சுதா என்ற 19 மாடி கடைத் தொகுதியில் நேற்றுக் காலை தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளி யேற்றப்பட்டனர். இதே கட்டடத்தில்தான் எல்ஐசி அலுவலகம், வங்கி, நிதி நிறு வனங்கள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்படு கின்றன. காலை 10.20 மணியள வில் 16வது தளத்தில் மூண்ட தீ, மளமளவென்று மற்ற இடங்களுக் கும் பரவியது. இதனால் ஊழியர்கள் அனை வரும் அவசர அவசரமாக வெளி யேற்றப்பட்டனர். இதற்கிடையே தகவலறிந்து 10 வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ மூண்ட தளத்தில் தான் பாரத ஸ்டேட் வங்கியின் கணினி கட்டமைப்பு அறை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் மதிப் பிலான கணினிகள் தீயில் நாச மடைந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. சேத விவரம் பற்றி உடனடியாகத் தெரியவில்லை.
கோல்கத்தா கட்டடத்தில் தீ
1 mins read

