புதுடெல்லி: பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பள்ளத்தாக் கில் நடைபெற்ற ராணுவ வீரர் களின் தீபாவளி கொண்டாட்டத் தில் பங்கேற்று உரையாற்றினார். கடுமையான சூழ்நிலையில் வீரர்கள் செய்யும் தியாகத்தைப் பாராட்டிய திரு மோடி, ராணுவ வீரர்களைத் தனது குடும்பமாகக் கருதுவதாகக் கூறினார். "இவ்வாண்டின் தீபாவளியை நான் எனது குடும்பத்துடன் கொண்டாட விரும்பினேன். அதனால்தான் இராணுவ வீரர் களிடையே கொண்டாடிக் கொண் டிருக்கிறேன். ராணுவ வீரர்களை எனது குடும்பமாகக் கருது கிறேன். தீபாவளி போன்ற நன்னா ளில் வீரர்கள் மத்தியில் நேரத்தை செலவிடும்போது அவர்களும் புதிய உத்வேகம் பெறுகின்றனர். ராணுவ வீரர்கள் கடமை முடிந்து ஆயுதப் படைகளைவிட்டு வெளி யேறும்போது சிறந்த யோகா பயிற்றுநர்களாகவும் ஆக முடியும்," என்றார் பிரதமர் மோடி.
காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி. படம்: இந்திய ஊடகம்

