மாசு காரணமாக இந்தியா வில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 2015ஆம் ஆண்டில் மாசு காரணமாக இந்தியாவில் 2.5 மி. மக்கள் பலியாகி உள்ளனர். மாசு, சுகாதாரம் தொடர்பான பிரபல மருத்துவ இதழான 'லான்சட்'டில் வெளியான ஆய் வறிக்கை ஒன்றில் மாசு காரணமாக நேர்ந்த உயி ரிழப்புகளில் இந்தியா ஐந்தாம் இடத்தைப் பிடித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மாசு காரணமாக 1.8 மி. மக்கள் பலியாகி உள் ளனர்.
அந்த ஆய்வின்படி சீனா 16வது இடத்தில் உள்ளது. 2015ல் உலக அளவில் எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகியவற்றால் ஏற்பட்ட உயி ரிழப்பைவிட மாசு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை மும்மடங்கானது. உலகில் நேரும் மரணங்களில் ஆறில் ஒருவர் மாசு காரணமாக பலியாகும் அதிர்ச்சியான தகவலும் அந்த சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் அதிகப்படியாக மாசு ஏற்படுவதாக 'லான்சட்' சஞ் சிகையின் அறிக்கை தெரிவிக் கிறது.

