சென்னை: உடல் நலம் பாதிக்கப் பட்ட பிறகு ஓராண்டு காலமாக பொது இடங்களில் தலை காட்டாத திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலு வலகம் வந்து அனைவரையும் நேர டியாகச் சந்தித்தார். சென்ற வியாழக்கிழமை இரவு 7.00 மணியளவில் திமுக செயல் தலைவரும் மகனுமாகிய மு.க. ஸ்டாலினுடன் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத் துக்கு அவர் வருகையளித்தார். திரு கருணாநிதியை, முதன் மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் பொன் முடி, எ.வ.வேலு உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
பின்னர் முரசொலி பவள விழா காட்சி அரங்கத்தை அவர் பார்வை யிட்டார். திமுக நாளிதழான முரசொலி யில் அவர் எழுதிய கட்டுரைகள் படங்களுடன் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. இதைப் பார்த்து மகிழ்ந்த அவர் சைகையால் ஸ்டாலினுக்கும் மற்ற வர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார். முரசொலி ஆசிரியர் அறையில் கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற மெழுகுச் சிலையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சிலையைக் கண்டதும் கருணா நிதி சில நிமிடங்கள் கண் இமைக் காமல் பார்த்தார்.
காட்சியில் வைக்கப்பட்டிருந்த முரசொலியில் வெளியான தனது கட்டுரைகளைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி நெகிழ்ச்சி அடைந்தார். வலது படத்தில் தன்னைப் போன்றுள்ள மெழுகுச் சிலையை கருணாநிதி கண் சிமிட்டாமல் சில நிமிடம் வியப்புடன் பார்த்தார். படம்: இந்திய ஊடகம்

